இனி குடியேற முடியாது; இந்தியர்களுக்கு சிக்கல் - ரூல்ஸ் போட்ட நாடு!

India Canada
By Sumathi Sep 19, 2024 12:30 PM GMT
Sumathi

Sumathi

in கனடா
Report

கனடா தனது குடியேற்ற விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது.

கனடா

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடியேற்றம் குறித்த முக்கிய தகவல்களை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

canada

அதில், குடியேற்றம் என்பது எங்கள் பொருளாதாரத்திற்கு ஒரு நன்மை - ஆனால் தவறான நபர்கள் இந்த முறையை துஷ்பிரயோகப்படுத்தி துன்புறுத்தும்போது, நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

குடியேற்றத் துறை தகவல்களின்படி, 2023 ஆம் ஆண்டில் 5,09,390 அனுமதிகளையும், 2024 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 1,75,920 அனுமதிகளையும் வழங்கியுள்ளது. இந்த புதிய நடவடிக்கையின் மூலம், 2025 ஆம் ஆண்டில் வழங்கப்படும் வெளிநாட்டு கல்வி அனுமதிகளின் எண்ணிக்கை 4,37,000 ஆக குறைக்கப்படும்.

கோர தாண்டவமாடும் பசி, பட்டினி - யானைகளைக் கொன்று உணவளிக்க அரசு முடிவு!

கோர தாண்டவமாடும் பசி, பட்டினி - யானைகளைக் கொன்று உணவளிக்க அரசு முடிவு!

குடியேற்ற விதிமுறை

மேலும், மாணவர்கள் மற்றும் தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்களின் மனைவிகளுக்கு வேலை அனுமதி தகுதியையும் இந்த மாற்றங்கள் கட்டுப்படுத்தும். குறைந்த விலையுள்ள வீடுகள் கிடைப்பதில்லை.

இனி குடியேற முடியாது; இந்தியர்களுக்கு சிக்கல் - ரூல்ஸ் போட்ட நாடு! | Canada Tightens Immigration Rules Indian Students

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகளுக்கு புலம்பெயர்ந்தவர்கள் காரணம் என்று உள்நாட்டு மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் இந்திய அரசாங்கத்தின் தரவுகளின்படி, சுமார் 4.27 லட்சம் மாணவர்கள் கனடாவில் படிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.