மீண்டும் ஆட்டத்தை காட்டும் கொரோனா; இந்தியாவில் 257 பேர் பாதிப்பு - உலகநாடுகள் அச்சம்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
ஆசியாவில் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மக்கள் தொகை அதிகம் இருக்கும் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது.
இந்தியாவில் 250க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 59 வயது பெண்ணும், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியும் சமீபத்தில் உயிரிழந்தனர். அவர்கள் உயிரிழந்த பிறகு, அவர்களின் மாதிரிகளை சோதனை செய்த போது அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மத்திய அரசு விளக்கம்
மேலும், கொரோனா காரணமாக இந்த மரணங்கள் நிகழவில்லை என தெளிவுபடுத்தியுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து மத்திய அரசு, சிங்கப்பூர், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில்,
இந்தியாவில் கட்டுக்குள் உள்ளது. தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் 257 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா நிலைமையை சுகாதார அமைச்சகம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது, அச்சப்பட தேவையில்லை என தெரிவித்துள்ளது.