சுனாமியை கூட ஏற்படுத்தும் பயங்கர ஆயுதம் - 2 நாடுகளிடம் மட்டும்தான் இருக்கு!
உலகிலேயே இரு நாடுகளிடம் மட்டுமே இருக்கும் ஆயுதம் குறித்து தெரிந்துக்கொள்வோம்.
ரஷ்யா
ரஷ்யாவிடம் அணுசக்தியால் இயங்கும் நீருக்கு அடியில் பாய்ந்து சென்று தாக்கக்கூடிய போஸிடான் என்ற ஆயுதம் இருக்கிறது. இந்த போஸிடானால் அணு ஆயுதங்களைக் கூட எடுத்துச் செல்ல முடியும்.
2018ல் ரஷ்ய அதிபர் புதின் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்தார். இந்த ஆயுதம் பயன்படுத்தப்பட்டால் 500 மீட்டர் உயரத்தில் கதிரியக்கத்துடன் கூடிய சுனாமி ஏற்படலாம். இதனால் ஒட்டுமொத்த பிரிட்டனும் கூட நொடிகளில் மூழ்கிவிடும் எனக் குறிப்பிடப்பட்டது.
மேலும், போஸிடான் கண்டம் விட்டு கண்டம் பாயும் அணுசக்தியால் இயங்கும் ஒரு ட்ரோன் ஆயுதம். அது நீருக்கு அடியில் பயணிக்கும் என்பதால் மற்ற ஆயுதங்களை விட இது வேகத்தில் குறைவாகவே இருக்கும். 10,000 கிமீ தூரம் வரை சென்று தாக்கக் கூடியது.
ஹால்-5-23
1000 மீட்டர் ஆழத்திலும் இயங்கும். மேலும், அதன் 100 வாட் வேகத்தில் பாயும். ஒரு போஸிடான் இரண்டு அணு ஆயுதத்தைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது. அது கடலில் வெடித்தால் அதீத ஆற்றல் வெளிப்படும். இதனால் கதிரியக்க சுனாமி ஏற்படவும் கூட வாய்ப்புகள் மிக மிக அதிகமாம்.
இதுபோல ஆபத்தான ஆயுதம் கொண்ட மற்றொரு நாடு வடகொரியா. 'ஹால்-5-23' நீருக்கு அடியில் அணு ஆயுதங்களை எடுத்துச் செல்லும் இந்த ஆயுதமும் மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தும் திறன் கொண்டது. மேலும், சுனாமி போன்ற அலைகளை உருவாக்கும் திறன் கொண்டது. இருப்பினும், இது ரஷ்யாவின் போஸிடான் அளவுக்கு வலிமையானது இல்லை எனக் கூறப்படுகிறது.