தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது நாளாக சற்று குறைந்தது..!
தமிழகத்தில் இரண்டாவது நாளாக கொரோனா தொற்று சற்று குறைந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு கிடு கிடுவென உயர்ந்து வந்தது. கொரோனா தொற்று அதிகரித்ததை அடுத்து மக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தி இருந்தது.
சற்று குறைந்தது கொரோனா பாதிப்பு
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு: தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 2,662- ஆக பதிவாகியுள்ளது. நேற்று பாதிப்பு 2,672 ஆக பதிவானது.
கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 16,765 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,542- ஆக உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 373 பேருக்கும், கோவை மாவட்டத்தில் 137 பேருக்கும் திருவள்ளூர் மாவட்டத்தில் 132 பேருக்கும், திருச்சி 112- பேருக்கும், காஞ்சிபுரம் 89 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.