அதே மாசம்.. மறுபடி மொதல்ல இருந்தா - தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா!
தமிழ்நாடு முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 500ஐ நெருங்குகிறது.
கொரோனா
தொற்று வேகமெடுத்து வரும் நிலையில், பொதுமக்கள் உரிய பாதுகாப்பு நெறுமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 2019-ல் உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பு ஏற்படுத்தியது.
அதை தொடர்ந்து டெல்டா, ஒமைக்ரான் என திரிபு வகை வைரஸ்களும் மக்களை புரட்டிப் போட்டன. தற்போது கொரோனா மீண்டும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 334 பேர் பாதிக்கப்பட்டனர். அதே போன்று தமிழகத்தையும் தாக்க தொடங்கியுள்ளது.
அலெர்ட்!
பிப்ரவரி மாதத்தில் மட்டும் 480 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். நேற்று ஒரே நாளில் 83 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. தொடர்ந்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மருந்தியல் துறை தலைவர் பரந்தாமன் தெரிவித்துள்ளார்.
தற்போது அதிகமாக பரவும் வைரஸால் பெரிதாக உயிரிழப்பு இல்லை எனக் கூறப்பட்டாலும், மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, முகக்கவசம் அணிவது பேன்ற வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினால், மீண்டும் ஊரடங்கை தடுக்கலாம் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது. கொரோனா பரவல் அதிகரிப்பது குறித்து பிரதமர் மோடி நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.