ஒரே கல்.. ஆசியாவின் மிகப் பெரிய சிலை; விநாயகர் சதுர்த்தி கோலாகலம் - எங்கு தெரியுமா?
விநாயகர் சதுர்த்தி விழா உலகெங்கிலும் உள்ள இந்துக்களால் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி தினங்களில், விநாயகர் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடக்கும். அந்த வகையில், கோவையில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான,
புலியகுளம் அருள்மிகு முந்தி விநாயகர் ஆலயத்தில் நடக்கும் சிறப்பு பூஜைகளுக்கு பக்தர்களிடம் எப்போதும் வரவேற்பு உண்டு. விநாயகர் சதுர்த்தி தினத்தில், சாலையில் நீண்ட வரிசையில் காத்திருந்து, பக்தர்கள் தரிசனம் செய்து செல்வது வழக்கம்.
கோலாகலம்
ஆசியாவிலேயே, ஒரே கல்லால் செய்யப்பட்ட மிகப் பெரிய விநாயகர் சிலை என்ற பெருமையை இந்த கோவில் சிலை பெற்றுள்ளது. விழா நாட்களில் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும். விநாயகர் சதுர்த்தி தினத்தன்று,
கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். விநாயகர் சதுர்த்திக்கு முதல் நாள் மாலையிலே யாகவேள்வி தொடங்கி விடும். மறுநாள் அதிகாலை 2-ம் நாள் யாகவேள்வி நடக்கும்.
அதைத் தொடர்ந்து 11 வகையான திரவியங்களை கொண்டு மகா அபிஷேகம் நடத்தப்படும். பின்னர், ஒன்றரை டன் மலர்களை கொண்டு ராஜ அலங்காரம் செய்யப்படும். விநாயகர் சதுர்த்தியன்று, ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவார்.