காவல்துறையின் ட்விட்டர் பக்கம் ஹேக் - மர்ம கும்பல் கைவரிசை!
கோவை காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது.
ட்விட்டர் பக்கம்
கோவை நகர காவல்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் திடீரென அந்த ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு போலியாக ட்விட்டர் பக்கம் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
ட்விட்டர் செயலியினை பதிவிறக்கம் செய்து கோவை சிட்டி போலீஸ் என்ற பெயரில் லாகின் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில்,
இச்செயலில் ஈடுப்பட்ட மர்ம கும்பலை போலீஸார் வலைவீசி தேடி வந்தனர். தொடர்ந்து முடக்கப்பட்ட ட்விட்டர் பக்கத்தை 5 மணி நேரத்திற்கு பிறகு சைபர் கிரைம் பிரிவு போலீசார் மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட ட்விட்டர் கணக்கில் க்ரிப்டோ கரன்சி கும்பல் பதிவுகள் நீக்கம் செய்யப்பட்டது.