கோவை மாணவி கொலை வழக்கில் திருப்பம் : பழகிய குடும்ப நண்பரே பலாத்காரம் செய்து கொன்ற கொடுமை

murdered coimbatore 14yeargirl manarrested
By Irumporai Dec 17, 2021 09:53 AM GMT
Report

கோவை சரவணம்பட்டி பகுதியில் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவி கொடூர கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மாணவியின், தாயின் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை சரவணம்பட்டி அடுத்த சிவானந்தபுரம் யமுனா நகர் பகுதியில் நேற்று துப்புரவு பணியாளர் குப்பைகளை அள்ளிக் கொண்டிருக்கும் போது ஒரு புதரில் சாக்கு மூட்டையில் இருந்து துர்நாற்றம் வந்தது. அந்த சாக்கு மூட்டை அருகே சென்று பார்த்தபோது உள்ளே மனித உடல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், கோவை அனைத்து மகளிர் கிழக்கு காவல் நிலையத்தில் காணாமல் போனதாக அந்த 15 வயது மாணவியின் தாயார் மல்லிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) புகார் கொடுத்தது தெரியவந்தது.

இதற்கிடையே, கோவை அரசு மருத்துவமனையில் இந்திய ஜனநாயக மாதர் சங்கம் உட்பட பல்வேறு அமைப்பினர் சிறுமி சாவில் உரிய காரணத்தை கண்டறிந்து கொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளி மாணவி கொடூரக் கொலை குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சிறுமியை கொடூரமாக கொலை செய்தது, சாக்குமூட்டையில் கட்டி அதே பகுதியில் வீசி இருக்கும் நபர் வேறு பகுதியில் இருந்து வந்திருக்க முடியாது என்று போலீசார் உறுதி செய்தனர்.

இதையடுத்து, மாணவியின் தாயிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், அப்பகுதியைச் சேர்ந்த சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த ஒரு சிலரிடமும் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கொலை செய்யப்பட்டு இறந்த பள்ளி மாணவியின், தாயாரின் கள்ளக்காதலன் முத்துக்குமார் தான் இந்த கொடூர சம்பவத்தை செய்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் முத்துக்குமாரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீசார் கூறியதாவது: முத்துக்குமார் (44) சிவானந்தபுரம் யமுனா நகர் பகுதியில் தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். முத்துக்குமார் கட்டிட மேசன் வேலை செய்து வருகிறார்.

அப்போது முத்துக்குமாருக்கு, இறந்த மாணவியின் தாயாருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அடிக்கடி இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், முத்துக்குமாருக்கு, மல்லிகாவின் இரண்டாவது மகள் மீது ஆசை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, மல்லிகாவின் 2 பவுன் தங்க நகையை தன்னுடைய அவசர தேவைககாக வாங்கி முத்துக்குமார் அடகு வைத்துள்ளார். இந்த நகையை மல்லிகா அடிக்கடி மீட்டு தரும்படி கேட்டு வந்துள்ளார். ஆனால், முத்துக்குமாரால் அந்த நகையைத் திருப்பிக் கொடுக்க முடியாத சூழல் இருந்து வந்துள்ளது.

இதற்காக, முத்துக்குமார் ஒரு திட்டத்தை தீட்டி உள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை, மல்லிகா வெளியூருக்கு சென்று விட்டார். அந்த சமயத்தில் முத்துக்குமார், மல்லிகாவின் இரண்டாம் மகளை அழைத்து, உனது அம்மா நகையை கேட்டு நச்சரித்து வருகிறார்.

நான் நாளை காலை நகையைத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன், நீயும் ஊருக்கு சென்றுவிட்டு வரும் உனது தாயிடம் நான் நகையை கொடுத்து விட்டதாகவும் அதை பீரோவில் வைத்திருப்பதாகவும் சொல்லி விடு என கூறியிருக்கிறார்.

அதை நம்பிய அந்த சிறுமி, வெளியூருக்கு சென்று திரும்பி வந்த தனது தாயிடம், முத்துக்குமார் நகையை கொடுத்து விட்டதாகவும் தான் அதை பீரோவில் வைத்து இருப்பதாகவும் கூறியிருக்கிறார். பின்னர் மறுநாள் காலை மல்லிகா தனது மூத்த மகளுடன் வேலைக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய முத்துக்குமார், அந்த சிறுமியை செல்போன் மூலம் அழைத்துள்ளார். தன்னிடம் நகை இருப்பதாகவும் வந்து தனது வீட்டில் பெற்றுக் கொள்ளுமாறும் கூறியிருக்கிறார். இதை நம்பிய சிறுமி, முத்துக்குமார் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அப்போது முத்துக்குமார் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. நகையை கேட்ட சிறுமியிடம், தனது ஆசைக்கு இணங்குமாறு கட்டாயப்படுத்தி உள்ளார். இதையடுத்து அங்கிருந்து அந்த சிறுமி தப்பியோட முயற்சி செய்துள்ளார்.

ஆனால் முத்துக்குமார் கதவை பூட்டிவிட்டு அந்த சிறுமியை கீழே தள்ளி பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். ஆனால், அந்த சிறுமி அவரை தள்ளிவிடவே, ஆத்திரமடைந்த முத்துக்குமார் தலையணையை எடுத்து சிறுமியின் முகத்தில் வைத்து அழுத்தி உள்ளார்.

இதில் லேசான மயக்கம் அடைந்த சிறுமியை, முத்துக்குமார் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் முகத்தை தலையணையால் அமுக்கி கொலை செய்துள்ளார். அதன் பின்னர் ஒரு பிளாஸ்டிக் சாக்கு மூட்டையில் கட்டி வெளியில் எங்காவது கொண்டு சென்று பிணத்தை அப்புறப்படுத்த திட்டமிட்டுள்ளார்.

இதன்படி தனது பைக்கில், சாக்குமூட்டையில் கட்டி பிணத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டார். பின்னர், ஆள் நடமாட்டம் எதுவும் இல்லாத குப்பை தொட்டி அருகே, முத்துக்குமார் மாணவியின் உடலை கொண்டு சென்று சாக்கு மூட்டையை தூக்கி வீசினார். பின்னர் எதுவும் தெரியாதது போல வீட்டில் வந்து இருந்து கொண்டார்.

அன்று மாலை, பணி முடிந்து வீடு திரும்பிய மல்லிகா தனது மகள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து, இது குறித்து பல இடங்களில் தேடினர். அப்போது, முத்துக்குமாரும் அவருடன் சேர்ந்து பல இடங்களுக்குச் சென்று தேடினார்.

பின்னர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுப்பதற்கு முத்துக்குமார் உதவுவது போல நடித்துள்ளார். அதன்பிறகு, தினமும் முத்துக்குமார் சாக்கு மூட்டை வீசிய இடத்தை ரகசியமாக நோட்டமிட்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று சாக்கு மூட்டையில் இருந்து துர்நாற்றம் வீசியது. போலீசார் மாணவி கொலை செய்யப்பட்டதை உறுதி செய்தனர். அப்போதும் முத்துக்குமார் அந்த இடத்தில் வந்து அழுது நடித்துள்ளார்.

தன் மீது எந்த சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக நேற்று அப்பகுதியிலேயே நின்று சோகத்துடன் சிறுமியின் தாயார் மல்லிகாவிற்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தார்.

ஆனால், இறந்து போன மாணவி கடைசியாக செல்போன் மூலம் பேசியது முத்துக்குமாரிடம் தான் என்பதை போலீசார் உறுதி செய்த பின்னர் விசாரணை வளையத்தில் முத்துக்குமாரை கொண்டு வந்து விசாரணை நடத்தியதில்  நடந்த நிகழ்வுகளை கூறியுள்ளார்.