வனத்துறை கட்டுப்பாடில் வந்த பழைய குற்றாலம் - அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்!
பழைய குற்றாலம் அருவியை வனத்துறையினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தென்காசி
தென்காசி மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தளம் குற்றாலம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழைய குற்றாலம் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் வாலிபர் ஒருவர் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து குற்றால அருவியில் குளிக்க நேரக் கட்டுப்பாடு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.அதன்படி, பழைய குற்றாலம் அருவியை வனத்துறையினர் வசம் ஒப்படைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியானது.
குற்றாலம்
தொடர்ந்து பழைய குற்றாலம் பகுதியில் தமிழக வனத்துறை அமைச்சர் , தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் ,உள்ளிட்ட அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
மேலும் வனத்துறை சார்பில் சோதனைச்சாவடியானது அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் வாகனங்கள் அனைத்தும் முழுமையாக சோதனை செய்யப்பட்ட பிறகே உள்ளே அனுமதித்து வருகின்றனர் . இதனால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.