குற்றாலத்தில் பெருக்கெடுத்தோடிய வெள்ளம் ; சிறுவன் சடலம் மீட்பு - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
குற்றால அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் உயிரிழப்பு.
குற்றாலம்
கோடை கால விடுமுறை என்பதால் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவிகளுக்குச் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், வளிமண்டலக் காற்றழுத்த மாறுபாட்டால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இதனால் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருத்து மெயின் அருவி ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்காசி மாவட்டத்திற்கு மே21 ஆம் தேதி வரை ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.இதனால் குற்றாலம் நீர் பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும் என்பதால் குற்றாலத்திலுள்ள பிரதான அருவிகளான பழைய குற்றால அருவி,
ஆட்சியர் அறிவிப்பு
ஐந்தருவி மற்றும் இதர அருவிகளில் பெரும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அருவிகள், அணைப் பகுதிகள் மற்றும் இதர சுற்றுலா பகுதிகளில் மறு உத்தரவு வரும் வரை பொதுமக்கள் குளிக்கத் தடை விதித்து ஆணையிடப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் கனமழை மற்றும் மிக கனமழை காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறை தொலைப்பேசி எண் - 1077 அல்லது 04633 290548 என்ற எண்களில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்”என குறிப்பிட்டிருந்தது.
முன்னதாக பழைய குற்றால அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் திருநெல்வேலியை சேர்ந்த அஸ்வின் என்ற 17 வயது சிறுவன் வெள்ளத்தில் சிக்கி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை அடித்துச் செல்லப்பட்டார். அதில் அந்த சிறுவன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மேலும் காட்டாறு, வெள்ள பெருக்கை முன்கூட்டியே அறிய சென்னை ஐஐடி பேராசிரியர் தலைமையில் சிறப்பு குழு தயாரித்த சென்சார் கருவியை விரைவில் பொருத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அருவியின் மேல்பகுதியில் பொருத்தப்பட்டு முன்பாகவே கண்காணித்து எச்சரிக்கப்படும்.