வடிவேலு தொடர்ந்த 5 கோடி மான நஷ்ட வழக்கு - சிங்கமுத்துவுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்
சிங்கமுத்து தனக்கு 5 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என நடிகர் வடிவேலு மனு தாக்கல் செய்துள்ளார்.
வடிவேலு
தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் வைகை புயல் வடிவேலு. சில காலம் திரைப்படங்களில் நடிக்காமல் விலகி இருந்த இவர் தற்போது மாமன்னன் படத்தில் குண சித்திர வேடத்தில் நடித்திருந்தார்.

நகைச்சுவை நடிகரான சிங்கமுத்துவுடன் பல படங்களில் வடிவேலு இணைந்து நடித்திருந்தார். இதன் பின் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் ஒன்றாக நடிப்பதில்லை. மேலும், தாம்பரத்தில் பிரச்சினைக்குரிய நிலத்தை தனக்கு வாங்கிக் கொடுத்ததாக சிங்கமுத்துவுக்கு எதிராக எழும்பூர் நீதிமன்றத்தில் வடிவேலு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
மான நஷ்ட வழக்கு
இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில், சிங்கமுத்துவுக்கு எதிராக மற்றொரு மனு தாக்கல் செய்துள்ளார் வடிவேலு. அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சிங்கமுத்து, யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் என்னைப்பற்றி தரக்குறைவாகப் பேசியுள்ளார். இது பொதுமக்கள் மற்றும் எனது ரசிகர்கள் மத்தியில் எனக்கு இருக்கும் நற்பெயரை களங்கப்படுத்தும் செயல்.

எனவே சிங்கமுத்து ரூ.5 கோடியை எனக்கு நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும். அத்துடன் என்னைப்பற்றி அவதூறு பரப்ப சிங்கமுத்துவுக்குத் தடை விதிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, நடிகர் சிங்கமுத்து 2 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil