செல்லாது, செல்லாது..ஜாபர் சாதிக் கைது - அமலாக்கத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

Tamil nadu Madras High Court
By Swetha Jul 23, 2024 07:30 AM GMT
Report

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை ரத்து செய்ய கோரி ஜாபர் சாதிக் மனு அளித்துள்ளார்.

ஜாபர் சாதிக்

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான போதைப் பொருளை கடத்தியதாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் கடந்த மார்ச் 9ஆம் தேதி கைது செய்தனர்.

செல்லாது, செல்லாது..ஜாபர் சாதிக் கைது - அமலாக்கத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு! | Court Order To Ed Dept Respond Jaffer Sadiq Case

இதனை தொடர்ந்து சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக ஜாபர் சாதிக் மீது வழக்குப்பதிவு செய்து, அமலாக்கத் துறை அவரை கைது செய்தது.இந்த சூழலில் , சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்த தன்னை 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாததால்,

தன்னை கைது செய்தது செல்லாது என அறிவித்து அதை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி ஜாபர் சாதிக், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அரசியல் கட்சிகளுக்கு பணம்.. பிரபலங்களுடன் தொடர்பு - ஜாபர் சாதிக் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்!

அரசியல் கட்சிகளுக்கு பணம்.. பிரபலங்களுடன் தொடர்பு - ஜாபர் சாதிக் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்!

நீதிமன்ற தீர்ப்பு

அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் “போதைப்பொருள் கடத்தில் வழக்கில் ஜாபர் சாதிக் ஏற்கனவே சிறையில் இருந்ததால் உடனடியாக அவரை காவலில் எடுக்க முடியவில்லை என்று தெரிவித்தார்.

செல்லாது, செல்லாது..ஜாபர் சாதிக் கைது - அமலாக்கத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு! | Court Order To Ed Dept Respond Jaffer Sadiq Case

இதற்கு ஜாபர் சாதிக் தரப்பு மூத்த வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்து, “போதைப்பொருள் வழக்கில் ஜாமின் வழங்கப்பட்டு சிறையில் இருந்து வெளியில் வர இருந்த நிலையில், திகார் சிறை நிர்வாகம் அளித்த சிறை மாற்ற உத்தரவு காலாவதியாகிவிட்டது.

அதனால் காலாவதியான சிறை மாற்ற உத்தரவு மூலம் ஜாபர் சாதிக்கை அமலாக்கத்துறை காவலில் எடுத்தது செல்லாது” என வாதிட்டார். தொடர்ந்து இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் ஜாபர் சாதிக்கின் மனு குறித்து அமலாக்கத் துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டனர் .மேலும் விசாரணையை ஜூலை 31-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.