ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து வழக்கு - நீதிமன்றம் முக்கிய உத்தரவு
ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜெயம் ரவி
ஜெயம் படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் தீபாவளி, உனக்கும் எனக்கும், தனி ஒருவன் என பல்வேறு வெற்றி படங்களில் நடித்து உள்ளார்.
ஜெயம் ரவி கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
விவாகரத்து வழக்கு
சில மாதங்களுக்கு முன் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக ஜெயம் ரவி அறிவித்தார். ஆனால் இது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என ஆர்த்தி கூறினார்.
இந்த விவாகரத்து வழக்கு இன்று(15.11.2024) சென்னை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன் விசாரணைக்கு வந்தபோது, ஜெயம் ரவி நேரில் ஆஜராகி இருந்தார். அவரது மனைவி ஆர்த்தி காணொலி வாயிலாக ஆஜராகி இருந்தார்.
இந்த வழக்கின் விசாரணையில், "இருவருக்கும் இடையான பிரச்சினை தொடர்பாக இன்றைய தினமே குடுநல நீதிமன்ற சமரச தீர்வு மையத்தின் மூலமாக பேச வேண்டும்" என இருவருக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.