அமைதியாக இருப்பதால் தப்பு செய்தேன் என அர்த்தமில்லை - மௌனம் கலைத்த ஆர்த்தி
ஜெயம் ரவியின் விவாகரத்து குறித்த குற்றச்சாட்டுகள் குறித்து ஆர்த்தி விளக்கமளித்துள்ளார்.
ஜெயம் ரவி
பிரபல நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் மனைவி ஆர்த்தியுடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக நடிகர் ஜெயம் ரவி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ஆனால் இதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது என தற்போது ஆர்த்தி கூறினார்.
ஆர்த்தியுடன் விவாகரத்து
பாடகி கேனிஷா தான் இவர்களின் பிறவிக்கு காரணம் என சமூக வலைத்தளங்களில் பேச்சு எழுந்த நிலையில் அதை மறுத்த ஜெயம் ரவி, எனக்கு சொந்தமாக வங்கி கணக்கு கூட கிடையாது. ஜாயின்ட் அக்கவுண்டில் நான் எவ்வளவு பணம் எடுத்தாலும் அதற்கான மெசேஜ் ஆர்த்திக்குதான் போகும்.
ஆனால் அவர் எடுக்கும் பணம் பற்றி எனக்கு மெசேஜ் வராது. நான் செய்யும் ஒவ்வொரு செலவுக்கும் என்னிடம் கணக்கு கேட்பது மட்டுமல்லாமல் என் உதவியாளருக்கு அழைத்து இதெல்லாம் உண்மையா என விசாரிப்பார் என ஆர்த்தி மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை வைத்தார் ஜெயம் ரவி.
ஆர்த்தி விளக்கம்
இந்நிலையில் தற்போது ஆர்த்தி இது தொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். "எனது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி வரும் கருத்துகளுக்கான எனது மௌனம், பலவீனமோ குற்ற உணர்வின் அடையாளமோ அல்ல. நான் கண்ணியமாக இருக்கவும், உண்மையை மறைப்பதற்காக என்னை மோசமாக சித்தரிக்க முயற்சிப்பவர்களுக்கு பதிலளிக்காமல் இருக்கவும் முடிவு செய்துள்ளேன். ஆனால் சட்ட அமைப்பு நீதியை நிலைநாட்டும் என்று நம்புகிறேன்.
பரஸ்பர விவகாரத்திற்கு நான் சம்மதித்தாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனது வார்த்தைகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது வருத்தமளிக்கிறது. இன்று வரை மறுக்கப்பட்ட இந்த விஷயத்தில் தனிப்பட்ட உரையாடலை நான் இன்னும் எதிர்பார்க்கிறேன்.
நான் திருமணத்தின் புனிதத்தை ஆழமாக மதிக்கிறேன், யாருடைய நற்பெயரையும் புண்படுத்தும் பொது விவாதங்களில் ஈடுபட மாட்டேன். எனது கவனம் எங்கள் குடும்பத்தின் நல்வாழ்வில் உள்ளது, மேலும் வழிகாட்டுதலுக்கான கடவுளின் கருணையை நான் நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.