கஞ்சா வழக்கு...சவுக்கு சங்கருக்கு மதுரை நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு
சவுக்கு சங்கர் கைது
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் அளித்த பேட்டி ஒன்றில், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசினார் என அவர் மீது புகார்கள் எழுந்தன. அதே போல, அவர் மீது கஞ்சா வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பல இடங்களிலும் அவர் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. அதிகளவில் வழக்குகள் வந்த நிலையில், அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது.
மே 7ஆம் தேதி மீண்டும் கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் கைதான நிலையில், அவ்வழக்கில் ஜாமீன் கோரி மதுரை பொருள் தடுப்பு சிறப்பு பிரிவு நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சவுக்கு சங்கரை மேலும் இரண்டு நாட்களுக்கு விசாரிக்க போலீஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை மதியம் 3 மணிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சவுக்கு சங்கரை ஆஜர்ப்படுத்த வேண்டும் என்றும் விசாரணையின் போது வழக்கறிஞர் அவரை மூன்று முறை காலை மதியம் மாலை சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும் என காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.