அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்
கைது செய்யப்பட்டு நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வரும் 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி உத்தரவு.
நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி
அமலாக்கத்துறை விசாரணைக்கு பின் நேற்று நள்ளிரவு அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார்.
அப்போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு ரத்த நாளங்களில் 3 இடங்களில் அடைப்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவருக்கு பைபாஸ் சர்ஜரி தனியார் மருத்துவமனையில் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு
அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேனகா நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இதை அவசர வழக்காக இன்று தலைமை நீதிபதியின் அனுமதியோடு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி செந்தில் பாலாஜியிடம் நேரில் விசாரணை நடத்தினார்.
இதை அடுத்து செந்தில் பாலாஜிக்கு வரும் 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.