பெண்களை கடத்தி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சில்மிஷ சாமியார் - குற்றவாளியாக அறிவிப்பு!
கிருஷ்ணரின் அவதாரம் என்று கூறி பக்தர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சாமியாரை குற்றவாளியாக அறிவித்துள்ளனர்.
சாமியார்
சென்னை தியாகராயநகர் பசுல்லா சாலையில் ஸ்ரீராமானுஜர் மிஷன் என்ற பெயரில் அறக்கட்டளையை நிறுவி ஒவ்வொரு அம்மாவாசை அன்று சரவணன் என்கிற பிரச்சன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி சொற்பொழிவாற்றி வந்தார்.
இவர் தன்னை கிருஷ்ணரின் அவதாரம் என்றும் அரிசியை வெண்பொங்களாக மாற்றி காட்டுவது போன்ற விஷயங்களை செய்து பக்தர்களை ஏமாற்றி வந்தார். கடந்த 2004-ம் ஆண்டு சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தொழிலில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக சந்திக்க வந்துள்ளார்.
குற்றவாளியாக அறிவிப்பு
இந்நிலையில், அவரது சங்கடங்களை தீர்ப்பதாக கூறி அதற்கு பூஜை ஒன்று செய்யவேண்டும் என்று கூறினார். பின்னர் அந்த தொழிலதிபரை ஏமாற்றி அவரிடம் கோடிக்கணக்கில் பணத்தை பறித்து, அவரின் வீட்டையும் ஆக்கிரமித்து கொண்டார். மேலும் அவரது மகள் மற்றும் மனைவியை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்து ஆந்திராவிற்கு கடத்தி கொண்டு சென்றுள்ளார்.
அப்பொழுது அந்த சாமியார் மீது மடக்கிகிய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடத்தல், பாலியல் வன்கொடுமை, சிறை வைத்தல் உள்ளிட்ட 18 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சாமியாரை தேடி வந்தனர். பின்னர் தலைமறைவான சதுர்வேதி சாமியாரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2016-ம் ஆண்டு கைது செய்தனர்.
பிறகு ஜாமீனில் வெளிவந்தவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். தொடர்ந்து, சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் சதுர்வேதி சாமியாரை கடந்த ஜூன் 27-ம் தேதி தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. மேலும், இவர்மீது 5 மோசடி வழக்குகள் மற்றும் ஒரு பாலியல் வன்கொடுமை வழக்கு நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.