சனாதன சர்ச்சை...உதயநிதிக்கு அதிரடியாக உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்..!!
சனாதன விவகாரத்தில் அது பற்றி பேச அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்ன ஆராய்ச்சிகளை செய்யப்பட்டது என உதயநிதி தரப்பிடம் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சனாதன சர்ச்சை
சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தற்போது வரை சர்ச்சைக்குரிய விஷயமாகவே இருந்து வருகின்றது. இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோருக்கு எதிராக வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
உதயநிதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீதான விசாரணை நீதிபதி அனிதா சுமந்த் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமைசர் உதயநிதி தரப்பில், பாஜகவுடன் இணைந்த கட்சியைச் சேர்ந்த மனுதாரர்கள், அரசியல் மற்றும் சமூக விவாதத்திற்கான போர்க்களமாக நீத்திமன்றத்தை பயன்படுத்த முயற்சிப்பதாக வழக்கறிஞர் P.வில்சன் வாதங்களை முன்வைத்தார்.
மேலும், சாதிய அமைப்புகள் உருவாக காரணமாக இருந்த வர்ணாசிரம தர்மத்தை ஒழிப்பதற்காகவே உதயநிதி அவ்வாறு பேசியதாக குறிப்பிட்டு, 1902 மற்றும் 1937ஆம் ஆண்டுகளுக்கு இடையில் சட்டமேதை அம்பேத்கர் நிகழ்த்திய உரைகள் என்ற பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் வெளியிட்ட நூல்களின் அடிப்படையில் தான் அவரின் பேச்சு அமைந்ததாக கூறினார்.
அப்போது உயர் நீதிமன்ற நீதிபதிகள் சனாதன தர்மத்தை புரிந்து கொள்ள அமைச்சர் உதயநிதி என்ன ஆராய்ச்சி செய்தார் என கேள்வி எழுப்பியது மட்டுமின்றி, உதயநிதி நிகழ்த்திய உரையை தாக்கல் செய்யவும், பனாரஸ் இந்து பல்கலைகழகம் பிரசுரித்த உரையையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இதில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மீதான புகார்களை விசாரிப்பதற்காக நீதிபதி வழக்கை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.