திமுக நிர்வாகிகளுக்கு தீபாவளி போனஸ் - வெளியான முக்கிய தகவல்

Diwali M. K. Stalin DMK
By Thahir Nov 09, 2023 12:23 AM GMT
Report

திமுக நிர்வாகிகளுக்கு கட்சித் தலைமை தீபாவளி போனஸ் வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமுக நிர்வாகிகளுக்கு தீபாவளி போனஸ்

கடந்த தீபாவளியின் போது, இதுபோன்றதொரு ஏற்பாடு அமைச்சர் செந்தில் பாலாஜி மூலம் நடந்தது. தற்போது அவர் சிறையில் உள்ளதால், சிலபல லட்டுகளாவது கிடைத்தால் கூட பரவாயில்லை என்று எண்ணியிருந்த கட்சி நிர்வாகிகளுக்கு ஸ்வீட் பாக்ஸ்களே சென்றுள்ளதாம். இதனால், அவர்கள் மகிழ்ச்சியில் இருப்பதாக கூறுகிறார்கள்.

Diwali bonus for DMK executives

திமுகவில் தற்போது அமைப்பு ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ளன. இதில் உள்ள நிர்வாகிகள் மிக கவனமாக தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரின் பதவிகளுக்கு ஏற்றவாறு தொகை நிர்ணயிக்கப்பட்டு, பட்டியல் இறுதி செய்யப்பட்டதாம்.

இந்த தொகையானது மாவட்ட செயலாளர்கள் மூலம் விநியோகிக்க திட்டமிட்டு அப்பணிகள் தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பதவிகளுக்கு ஏற்ப ரொக்கம்

மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர்கள், வார்டு செயலாளர்கள், ஒன்றிய நிர்வாகிள், வாக்குச்சாவடி கமிட்டி என ரூ.5 ஆயிரம் முதல் ரூ.1.50 லட்சம் வரை தீபாவளி பரிசுத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அத்தகவல்கள் கூறுகின்றன.

கட்சி மேலிடம் வழங்கிய தொகையுடன் சேர்த்து அந்தந்த மாவட்டத்து அமைச்சர்கள் தங்களது கைகளில் இருந்து குறிப்பிட்ட தொகையை சேர்த்து வழங்கவும் கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தலுக்கு செலவு செய்ய வேண்டியதிருக்கும் என்பதால், அமைச்சர்களுக்கு பதிலாக சில மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்கள் ஒரு தொகையை சேர்த்து வழங்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.