அக்பர் - சீதா விவகாரம்..! மேற்கு வங்க அரசாங்கத்திற்கு நீதிமன்றத்தின் அறிவுறுத்தல் Strict advice
மேற்குவங்க மாநிலத்தின் இருக்கும் சிங்கங்களான அக்பர் மற்றும் சீதா குறித்த செய்திகள் தொடர்ந்து சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன.
சிங்கங்கள்
திரிபுராவின் செபாஜிலா உயிரியல் பூங்காவில் இருந்து மேற்குவங்கத்தின் சிலிகுரி உயிரியல் பூங்காவிற்கு கடந்த 12ஆம் தேதி 2 சிங்கங்கள் கொண்டு வரப்பட்டன.
இந்த சிங்கங்களுக்கு அக்பர் மற்றும் சீதா என பெயரிட்டுள்ளதை எதிர்த்தி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் நீதிமன்றத்தில் வழக்கை தொடுத்தனர்.
அறிவுறுத்தல்
இந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா நீதிமன்றம் இதில் மேற்குவங்க அரசிற்கு அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி, செல்லப் பிராணிகளுக்கு இந்து கடவுள் அல்லது இஸ்லாத்தின் நபிகள் பெயரைச் சூட்டுவீர்களா? என மேற்கு வங்க அரசு வழக்கறிஞரிடம் வினவினர்.
சிங்கங்களின் பெயரை உடனடியாக மாற்றும் படி உத்தரவிட்ட நீதிபதி, இப்பெயர்களை வைத்தது யார்? என்ற கேள்வியை எழுப்பி, பொதுநல அரசு, எதற்காக சிங்கங்களுக்கு சீதை, அக்பர் பெயரை வைத்து சர்ச்சையை உருவாக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பினார்.
இந்த சர்ச்சை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், அக்பர் என்று பெயர் வைப்பதை சீதா மட்டுமல்ல, தானும் ஆதரிக்கவில்லை என்று கூறினார்.