காதல் ஜோடிகளை குறிவைத்து... நடிகைகளுடன் உல்லாசம் - வசமாக சிக்கிய போலி போலீஸ்!
காதல் ஜோடிகளிடம் நகைகளை பறித்து, அதில் நடிகைகளுடன் போலீஸ் ஒருவர் உல்லாசமாக இருந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
நகை பறிப்பு
திருவள்ளூர், பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில், நண்பர்களுடன் காரில் மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் பேசிக்கொண்டிருந்தார். அவரிடம் போலீஸ் எனக் கூறி 4சவரன் தங்க நகைகளை பறித்துள்ளார்.
தொடர்ந்து, வெள்ளவேடு பகுதியில், காதல் ஜோடியிடம் நகை மற்றும் பணம் பறிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புகார் எழுந்த நிலையில், உதவி ஆணையர் முத்துவேல் பாண்டி தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
நடிகைகளுடன் உல்லாசம்
மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் தீவிர ஆய்வு செய்தனர். அதில் நகை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்ட நபரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், விருத்தாசலம் அருகே உள்ள சின்ன காப்பான்குளம் கிராமத்தை சேர்ந்த சிவராமன்(38).
இவர் 8 வருடங்களாக நெடுஞ்சாலையில், காரில் அமர்ந்திருக்கும் காதல் ஜோடிகளிடம் போலீஸ் எனக் கூறி நகைகளைப் பறித்து ஜாலியாக வாழ்ந்து வந்துள்ளார். ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளை குறிவைத்து நாளொன்றுக்கு 2 லட்சம் ரூபாய் வரை வழிப்பறி செய்து,
காதல் ஜோடி
பாலியல் புரோக்கர்கள் மூலம் சின்னத்திரை நடிகைகள் சிலருடன் ஒரு மணிநேரத்திற்கு 40 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை செலவு செய்து உல்லாசமாக இருந்ததாக கூறியுள்ளார். அதில் முக்கியமான நிகழ்ச்சி தொகுப்பாளினி உள்ளிட்டோர் விபரம் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்மீது 45 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது.