தண்டவாளத்தை கடக்க முயன்ற காதல் ஜோடி - நொடியில் நடந்த விபரீதத்தால் பலி!
தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற காதல் ஜோடி, ரயில் மோதி உயிரிழந்தனர்.
காதல் ஜோடி
சென்னை, பெருங்களத்தூரில் இருந்து வண்டலூர் செல்லும் ரயில்வே தண்டவாளத்தில் இளைஞர் ஒருவரும், இளம்பெண் ஒருவர் சடலமாக கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் விரைந்து சென்று இரு சடலங்களைட்யும் கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர் விசாரணையில் கடலூரைச் சேர்ந்த விக்ரம் (25), சிதம்பரத்தைச் சேர்ந்த ஆதிலட்சுமி (23) என்று தெரியவந்தது.
நொடியில் பலி
இருவரும் ஒரே கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்துள்ளனர். பின் இருவரும் சென்னையில் தனித்தனியாக அறை எடுத்து தங்கி, தனியார் நிறுவனங்களில் வேலை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் வழக்கம்போல் பெருங்களத்தூர் அருகே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றுள்ளனர்.
அப்போது செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயில் அவர்கள் மீது மோதி தூக்கி வீசப்பட்டதில் இருவரும் அதே இடத்தில் உயிரிழந்துள்ளனர்.
இதன் மூலம், இருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளவில்லை, தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது உயிரழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.