தீபம் ஏற்றச்சென்ற மனைவி.. கேஸ் சிலிண்டரை மாற்றிய சிறிது நேரத்தில் நடந்த பயங்கரம்!
கேஸ் சிலிண்டரை மாற்றும் போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை
சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர்கள் வீரக்குமார் - லட்சுமி தம்பதியினர். கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டிலிருந்த சமையல் கேஸ் சிலிண்டர் தீர்ந்துவிட்டதால் புதிய கேஸ் சிலிண்டரை மாற்றியுள்ளனர்.
அதில் வால்வு சரியாக இல்லாததால் கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது.இதனை லட்சுமி கவனிக்கவில்லை .இந்த நிலையில் சம்பவத்தன்று கேஸ் சிலிண்டரை மாற்றிய சிறிது நேரத்தில், வீட்டில் பூஜை செய்வதற்காக லட்சுமி, தீபம் ஏற்றச் சென்றுள்ளார்.
அதற்காகத் தீக்குச்சியை லட்சுமி உரசிய போது பெரும் சத்தத்துடன் கேஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியது.இதில் லட்சுமி மற்றும் அவரது கணவர் வீரக்குமாரின் உடலில் தீப்பற்றிக் கொண்டது.இதனால் வலியில் துடித்துக் கதறியுள்ளனர்.
விபத்து
அவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மருமகன் குணசேகரன் அவர்களைக் காப்பாற்ற முயன்றார். அப்போது வரும் பலத்த தீக்காயம் அடைந்தார்.இதனையடுத்து அருகிலிருந்தவர்கள் அவர்கள் 3 பேரும் மீட்டு சிகிச்சைக்காகச் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.