விமானத்தில் பாலியல் உறவில் ஈடுபட்ட தம்பதி - வீடியோவை கசியவிட்ட விமான குழு!

Thailand Viral Photos Flight
By Sumathi Dec 09, 2024 04:54 AM GMT
Report

விமானத்தில் தம்பதி பாலியல் உறவில் ஈடுபட்ட வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விமான குழுவின் செயல்

தாய்லாந்திலிருந்து சூரிச் என்ற பகுதிக்கு ஸ்விஸ் இன்டர்நேஷனல் விமானமான போயிங் 777 என்ற விமானம் பறந்துக் கொண்டிருந்தது.

swiss flight

அப்போது ஒரு தம்பதி திடீரென காக்பிட் அருகே சென்று உடலுறவில் ஈடுபட்டனர். இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை விமானத்தின் பைலட்களும் விமான குழுவினரும் பார்த்துள்ளனர்.

[AU8IQR8

குவியும் கண்டனம் 

அப்போது அங்கிருந்த அவர்கள் தங்கள் செல்போனில் அந்த காட்சிகளை வீடியோவாக எடுத்துக் கொண்டனர். பின் அந்த காட்சிக்கு வர்ணனை கொடுத்து வாட்ஸ் ஆப் குழுக்களில் பதிவிட்டுள்ளனர். இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,

ஒரு நபரின் விருப்பம் இல்லாமல் அவரை வீடியோ எடுப்பது தவறு. அதிலும் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு அந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்தது அதைவிட பெரிய தவறு. பொது இடத்தில் தம்பதி செய்தது தவறு என்றாலும் கூட எங்கள் ஊழியர்கள் எங்கள் புரோட்டோக்கால் படி நடந்திருக்க வேண்டும்.

எனவே அந்த போயிங் 777 விமானத்தின் குழுவிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்று சமயங்களில் அதை தடுத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.