ரொமான்ஸ் பண்றதுக்கு வேற இடமே கிடைக்கலையா? மெட்ரோ ரயிலில் காதலர்கள் செய்த அட்டூழியம்!

Viral Video Delhi
By Vinothini Sep 27, 2023 08:32 AM GMT
Report

 காதலர்கள் மெட்ரோ ரயிலில் செய்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

லவ்வர்ஸ் தொல்லை

டெல்லி மெட்ரோ ரயில்களில் கடந்த சில காலமாக இளம் ஜோடிகள் கட்டியணைத்து முத்தமிட்டு கொள்வது போன்ற முகம்சுளிக்கவைக்கும் செயல்கள் அடிக்கடி நடந்து வருகிறது. அதன் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

couple-romance-in-metro-train-video-goes-viral

இது குறித்து மோசமாக பேசினாலும், திட்டினாலும் கண்டுகொள்ளாத லவ்வர்ஸ் தொடர்ந்து இதுபோன்ற செயல்களை செய்து வருகின்றனர். பூங்கா, கடற்கரை, மறைவான இடம் போன்ற எந்த இடத்தையும் விட்டுவைப்பதில்லை, தற்பொழுது யார் பார்த்தாலும் பரவாயில்லை என்று பொது வெளியிலும் தொங்கிவிட்டனர்.

ஓயாத வன்முறை.. 2 மாணவர்கள் கடத்தி கொடூரக் கொலை - மக்கள் பதற்றம்!

ஓயாத வன்முறை.. 2 மாணவர்கள் கடத்தி கொடூரக் கொலை - மக்கள் பதற்றம்!

வைரல் வீடியோ

இந்நிலையில், இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் மெட்ரோ ரயில் ஓடி கொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவரும், இளம்பெண்ணும் கட்டியணைத்து கொண்டு முத்தமிட்டு கொள்கின்றனர். ஆனந்த் விஹார் பகுதியில் மெட்ரோ ரயில் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்த இளம் ஜோடி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள், விதிமுறையை பின்பற்ற வேண்டும் என்றும், இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.