2வது திருமணம் செய்து 8 நாள் - 3 குழந்தைகளை கொன்று தற்கொலை செய்த ஜோடி!
குழந்தைகளை கொன்று விட்டு தம்பதி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2வது திருமணம்
கேரளா, செறுபுழா பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஜா. இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்த நிலையில் சூரஜ் (12), சுஜின் (10) என இரண்டு மகன்களும், சுரபி (8) என ஒரு மகளும் உள்ளனர். இவரை கணவன் கைவிட்டதால் ஷாஜி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.

ஷாஜிக்கும் ஏற்கனவே திருமணம் முடிந்து மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். மேலும், தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறாமல் ஸ்ரீஜாவை திருமணம் செய்துள்ளார்.
அதிர்ச்சி சம்பவம்
இந்நிலையில், இவர்களது வீட்டின் கதவு நீண்ட நேரம் திறக்காமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அப்போது ஸ்ரீஜா மற்றும் அவரது மூன்று குழந்தைகள் ஆகியோர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர்.
தொடர்ந்து போலீஸாரிடம் புகாரளித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், சில நாட்களாவே கணவன், மனைவி இருவருக்கும் பிரச்சாணாஈ ஏற்பட்டு மூன்று பிள்ளைகளையும் மேல்மாடிக்குச் செல்லும் படிக்கட்டில் தூக்கு போட்டு கொலை செய்துள்ளனர்.
அதன்பின் இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது.