கூடுதல் டிக்கெட்டா; குழந்தையை நீங்களே வச்சிக்கோங்க - ஏர்போர்ட்டில் பெற்றோர் ரகளை!

Israel
By Sumathi Feb 03, 2023 05:20 AM GMT
Report

கூடுதல் டிக்கெட் வாங்க வேண்டும் என குழந்தையை பெற்றோர் விமான நிலையத்திலேயே விட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைக்கு டிக்கெட்

இஸ்ரேல், டெல் அவிவில் உள்ள பென்-குரியன் விமான நிலையத்தில் ஒரு குழந்தையோடு தம்பதி வந்துள்ளனர். அவர்கள் பெல்ஜிய பாஸ்போர்ட் வைத்திருந்தனர். விமான நிலையத்திற்கு தாமதமாக வந்த தம்பதி குழந்தைக்கு டிக்கெட் வாங்கவில்லை.

கூடுதல் டிக்கெட்டா; குழந்தையை நீங்களே வச்சிக்கோங்க - ஏர்போர்ட்டில் பெற்றோர் ரகளை! | Couple Leaves Ticketless Baby At Airport

விமான ஊழியர்கள் குழந்தையை விமானத்தில் ஏற்ற வேண்டும் என்றால் கூடுதல் கட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்க வேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்கு அந்த தம்பதி மறுப்பு தெரிவித்து நீண்ட நேரம் பணம் கட்டாமல் நின்றுள்ளனர்.

தம்பதி கொடுமை

மேலும், பணம் செலுத்துவதற்குப் பதிலாக, ரியான்ஏர் விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு தங்கள் குழந்தையை செக்-இன் கவுண்டரில் விட்டுவிட்டு செக்யூரிட்டி செக் பகுதிக்கு விரைந்தனர். இதனை கண்ட விமான நிலைய ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தொடர்ந்து, குழந்தையை விட்டு சென்ற தம்பதியை அழைத்து குழந்தையை எடுத்துசெல்லுமாறு உத்தரவிட்டனர். அவர்களது செயலை கண்டித்து போலீஸார் அவர்களை கைது செய்துள்ளனர். உடனடியாக பார்க்காவிட்டால் என்ன ஆகியிருக்கும் என்று ரியான்ஏர் ஊழியர்கள் தெரிவித்தனர்.