நள்ளிரவில் ரயில் நிலையத்தில் தூங்கிய 1 வயது குழந்தையை கடத்திய தம்பதி - போலீஸ் அதிரடி!
தம்பதி ஒருவர் நடுஇரவில் 1 வயது குழந்தையை கடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரயில் நிலையம்
ஒடிசா மாநிலம், காந்தம்மால் பகுதியைச் சேர்ந்தவர் நந்தினி கண்காகர் - லங்கேஸ்வர் தம்பதியர். இவர்கள் தங்களது ஒரு வயது ஆண் குழந்தையுடன் நேற்றிரவு ஒரிசாவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர்.
அப்பொழுது நள்ளிரவு என்பதால் அவர்கள் ரயில் நிலையத்தில் உறங்கியுள்ளனர். திடீரென 1 மணியளவில் எழுந்து பார்த்தபொழுது குலந்தனி காணவில்லை. ரயில் நிலையம் முழுவதும் தேடியும் கிடைக்காததால் போலீசில் புகாரளித்தனர்.
லாரி மீது நேருக்கு நேர் மோதி நசுங்கிய கார்.. குழந்தை உட்பட 7 பேர் பலி - முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!
போலீஸ் அதிரடி
இந்நிலையில், போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது மர்ம நபர் ஒருவர் குழந்தையை தூக்கிக்கொண்டு ஆட்டோவில் ஏறுவது தெரியவந்தது. போலீசார் அந்த ஆட்டோ எண்ணை வைத்து ஆட்டோ ஓட்டுநரை பிடித்து விசாரித்தனர். அப்பொழுது குன்றத்தூர் அடுத்த பகுதியில் அந்த நபரை இறக்கி விட்டதாக கூறியுள்ளார்.
இதனை அடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு சென்ட்ரல் ரயில் போலீசார் குழந்தையை மீட்க தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர், குன்றத்தூர் ஏரிக்கரை அருகில் விட்டில் குழந்தையோடு இருந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்து, குழந்தையை மீட்டு பெற்றோரிடம் சேர்த்தனர்.