குழந்தையை கடத்திய பெண்; லாக்-அப் மரணம் - என்ன காரணம்?
குழந்தை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் உயிரிழந்துள்ளார்.
கடத்தல் வழக்கு
நாகர்கோவில் அருகேயுள்ள மணவாளபுரத்தைச் சேர்ந்தவர் முத்து ராஜ். இவர் குடும்பத்துடன் சில தினங்களுக்கு முன்னர் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்றபோது, ஒன்றரை வயது மகன் ஹரிஷை பெண் ஒருவர் கடத்திச் சென்று விட்டார்.
தொடர்ந்து போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில், குழந்தையை கடத்திச் சென்றது சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த பாண்டியன்(45), அவரது மனைவி திலகவதி(40) ஆகியோர் எனத் தெரியவந்தது.
பெண் மரணம்
இருவரையும் கைது செய்தனர். பின், இருவரையும் ஆலாந்துறை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது மயக்கமடைந்த திலகவதி உயிரிழந்தார். சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை செய்ததில் விஷம் சாப்பிட்டு தற்கொலை செய்தது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.
காவலர்கள் பார்க்காத போது, தான் மறைத்து எடுத்துச் சென்ற விஷத்தை சாப்பிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதற்கிடையில், சேலம் காவல் நிலையங்களில் ஏற்கெனவே திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.