பிஸ்கெட் காட்டி குழந்தை கடத்தல் - 2 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
சென்னை அடுத்த அஸ்தினாபுரம் திருமலை நகரைச் சேர்ந்தவர் வினோத் இவரின் மகள் வர்ஷா. இவர் வர்ஷா மற்ற குழந்தைகளுடன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார்.
குழந்தை கடத்தல்
அப்பொழுது இந்த வழியாக ஆட்டோவில் வந்த நபர் ஒருவர் பிஸ்கட் கொடுத்து வர்ஷாவை கடத்திச் சென்றுள்ளார்.
அப்போது குழந்தையின் அழுகுறல் கேட்டு ஓடி வந்த பெற்றோர் குழந்தை கடத்தப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தாம்பரம் காவல் ஆணையர் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
2 மணி நேரத்தில் மீட்ட போலீசார்
இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். குரோம்பேட்டை எம்.ஐ.டி மேம்பாலத்தில் வாகன தண்ணிக்கையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல்துறையினர் சந்தேகத்தின் பெயரில் ஒரு ஆட்டோவை மடக்கி பிடித்தனர்.
பின்னர் ஆட்டோ ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வர்ஷினி கடத்தப்பட்ட பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில் ஆட்டோவில் இருந்த இரண்டு குழந்தைகளை இறக்கிவிட்டு வர்ஷாவை கடத்திச் சென்றது பதிவாகியுள்ளது.
போலீசார் விசாரணையில் குழந்தையை கடத்திய ஆட்டோ ஓட்டுநர் துாத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த சம்சுதன் என்பது தெரியவந்துள்ளது.