தண்டவாளத்தில் போட்டோஷூட் - திடீரென வந்த ரயிலால் 90 அடி பள்ளத்தில் குதித்த புதுமண தம்பதி!

India Rajasthan
By Jiyath Jul 15, 2024 06:48 AM GMT
Report

தண்டவாளத்தில் போட்டோஷூட் எடுத்த தம்பதி ரயில் வந்ததால் 90 அடி பள்ளத்தில் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

போட்டோஷூட் 

ராஜஸ்தான் மாநிலம் பாக்டி நகரில் உள்ள காலால் கி பிபாலியான் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ராகுல் (22) - ஜான்வி (20). சமீபத்தில் தான் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது . இதனால் ராஜஸ்தானில் உள்ள பாலியில் போட்டோஷூட் எடுக்க அவர்கள் திட்டமிட்டனர்.

தண்டவாளத்தில் போட்டோஷூட் - திடீரென வந்த ரயிலால் 90 அடி பள்ளத்தில் குதித்த புதுமண தம்பதி! | Couple Jumps From Rail Bridge Into 90 Feet Gorge

அங்கு 90 அடி பள்ளத்துக்கு மேல் பழமையான ரயில் மேம்பாலம் உள்ளது. அந்த ரயில் மேம்பால தண்டவாளத்தில் ராகுல் - ஜான்வி தம்பதி நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தனர்.

திடீரென மணமகளின் தாய், தந்தையை அறைந்த மணமகன் - அடுத்து நடந்த பகீர் சம்பவம்!

திடீரென மணமகளின் தாய், தந்தையை அறைந்த மணமகன் - அடுத்து நடந்த பகீர் சம்பவம்!

தீவிர சிகிச்சை 

அப்போது எதிர்பாராத விதமாக அந்த தண்டவாளத்தில் திடீரென ரயில் வந்தது. ஆனால், ராகுல் - ஜான்வி தம்பதியால் உடனடியாக அங்கிருந்து ஓடிவர முடியவில்லை. அதே சமயம் ரயில் மோதினால் உயிர் பிழைப்பது கடினம் என்பதால், அவர்கள் ஒன்றாக பாலத்திலிருந்து 90 அடி பள்ளத்தை நோக்கி குதித்தனர்.

தண்டவாளத்தில் போட்டோஷூட் - திடீரென வந்த ரயிலால் 90 அடி பள்ளத்தில் குதித்த புதுமண தம்பதி! | Couple Jumps From Rail Bridge Into 90 Feet Gorge

இதில், படுகாயமடைந்த அந்த தம்பதியினரை தீயணைப்பு வீரர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், 2 பேரின் உயிருக்கும் எந்த ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.