கள்ளக்காதலனுடன் தூக்கிட்ட ஆசிரியை - ஊருக்கே தெரிந்த உண்மையால் சோகம்!
ஆசிரியை கள்ளக்காதலனுடன் தூக்கிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவு
திருச்சி, சீத்தம்பட்டியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி கீர்த்தனா(23). இவர்களுக்கு 5 வயதில் மகள் ஒருவர் உள்ளார். தனியார் நர்சரி பள்ளியில் கடந்த சில மாதங்களாக ஆசிரியையாக வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், காட்டுப்புத்தூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(29). ஐடிஐ படித்துவிட்டு விவசாயம் செய்து வந்துள்ளார். இவருடன் கீர்த்தனாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜோடி தற்கொலை
அது நாளடைவில் தகாத உறவாக மாறியுள்ளது. தொடர்ந்து, இருவருடன் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில், இந்த கள்ளக்காதல் விவகாரம் இருவரது வீட்டிற்கும் தெரியவந்துள்ளது.
இதனால், அவமானமடைந்த இருவரும் அப்பகுதியில் உள்ள தோட்டத்தின் மோட்டார் அறை கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் உடல்களை மீட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.