4வயது சிறுமியை சூடுவைத்து, சித்ரவதை செய்து கொலை - தம்பதி வெறிச்செயல்!
4 வயது சிறுமியை தம்பதியினர் கொடுமைப் படுத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
4 வயது சிறுமி
திருப்பூர், திருவள்ளூர் நகரைச் சேர்ந்தவர்கள் பிரகாஷ் - கவுரி தம்பதி. இவர்கள் அதேப் பகுதியைச் சேர்ந்த மல்லிகா என்பவரது வீட்டில் வாடகைக்கு உள்ளனர். இந்நிலையில், மல்லிகா வீட்டிற்கு அவரது உறவினர்கள் ராஜேஷ்குமார்-கீர்த்திகா அடிக்கடி வந்துள்ளனர்.
அவர்களுக்கு குழந்தை இல்லாத்தால் கவுரியின் குழந்தை ஷிவானியுடன் அன்பாக இருந்து வந்துள்ளனர். எனவே, இந்த தம்பதி அந்த குழந்தையை சிறிது நாட்கள் அவர்களோடு அனுப்புமாறு கவுரியிடம் கேட்டுள்ளனர்.
கொன்ற தம்பதி
அவரும் அனுப்பியுள்ளார். இந்நிலையில், குழந்தை வழுக்கி விழுந்து விட்டதாக மருத்துவமனியில் சேர்த்துள்ளார். ஆனால் சிறுமியின் உடலில் பல தீக்காயங்கள் இருந்துள்ளது. மேலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
இதனால் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவர்கலிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், சிறிமி அடிக்கடி சேட்டைகள் செய்ததால் தம்பதியினர் சூடு வைத்து கொடுமை செய்துள்ளனர். மேலும், சிறுமி வீட்டில் இயற்கை உபாதை கழித்ததால் கோபத்தில் பிடித்து கீழே தள்ளியுள்ளார்.
அதில் சிறுமி விழுந்து மயக்கமடைந்துள்ளார். அதன்பின் சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதையடுத்து, ராஜேஷ்குமார் மற்றும் கீர்த்திகா கைது செய்யப்பட்டுள்ளனர்.