வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடி.. கபிள்ஸ் ரீல்ஸால் சிக்கிய தரமான சம்பவம்!
வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தம்பதி போலிசில் சிக்கினர்.
கபிள்ஸ் ரீல்ஸ்
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள உள்ள எம்.எஸ்.ஆர்., நகரை சேர்ந்தவர்கள் சாகர் குருங்(37) மற்றும் அவரது மனைவி ஊர்மிளா குமாரி. சிக்கியர்களான இவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருக்கு இடம் பெயர்ந்து வந்துள்ளனர். இதனிடையே சாகர் குருங் ஹோட்டல் ஒன்று வைத்து நடத்தி வருகிறார்.
அவரது மனைவி வேலைக்கும் செல்லவில்லை. வீட்டில் இருந்துவந்த அவர் சமூக வலைத்தளத்தில் உள்ள வீடியோக்களைப் பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அதில் இன்ஸ்பையர் ஆன அவர் சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்டு ஆக்டிவாக இருக்க முடிவு செய்தார்.
எனவே தனது புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் தனது வீட்டில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளையும் ரீல்ஸாக வெளியிட்டு வந்தார். அந்த வகையில், வெகுநாட்களாகவே பால்கனியில் பல அலங்கார செடிகளை வளர்த்து வந்ததை அழகாக புகைப்படமும் வீடியோவும் பகிர்ந்துள்ளார்.
அப்படித்தான் சம்பவ தினத்தன்றும் பால்கனியின் புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர்ந்துள்ளார் ஊர்மிளா. அதைக்கண்ட ஒரு பயணர், அந்த செடிகளுக்கிடையே மறைந்திருந்த கஞ்சா செடியை கண்டுபிடித்துள்ளார். உடனடியாக இது குறித்து காவல்துறைக்கு தகவலும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து காவல்துறையும் விசாரணையும் தொடங்கியுள்ளது. இதனிடையே விசாரணை பற்றி அறிந்த அவ்ர்களது உறவினர் ஒருவர் அலர்ட் கொடுக்க, ஊர்மிளா செடியை எடுத்து குப்பைத்தொட்டியில் வீசீயுள்ளார். இருந்தபோதிலும் கஞ்சா செடியின் சில இலைகள், அந்த தொட்டியில் அப்படியே இருந்துள்ளன.
கஞ்சா செடி..
அதையே ஆதாரமாக வைத்து, காவல்துறையினர் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர். அதில், தாங்கள் கஞ்சா வளர்த்து வந்ததை அந்த தம்பதி ஒப்புக்கொண்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது,
தகவல் கிடைத்ததும், நாங்கள் தம்பதியின் வீட்டில் சோதனை செய்தோம். ஆரம்பத்தில், கஞ்சா செடி குறித்த எங்கள் கேள்விகளுக்கு அவர்கள் பதிலளிக்கவில்லை. நாங்கள் ஆய்வு செய்ததில் இரண்டு தொட்டிகளில் இருந்து செடிகள் பிடுங்கப்பட்டதற்கான அறிகுறிகளைக் கண்டறிந்தோம்.
விசாரித்ததில், கஞ்சா வளர்த்ததை ஒப்புக்கொண்ட தம்பதியினர், 54 கிராம் எடையுள்ள செடிகளை வீசிய குப்பைத் தொட்டியைக் காட்டினார்கள். நாங்கள் அவற்றைக் கைப்பற்றினோம். தம்பதியினர் தங்கள் வீட்டு வாசலில் போலீசாரைப் பார்த்து,
கஞ்சா செடிகளை அவசரமாக அகற்றி, ஆதாரங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். விற்பனை செய்யும் நோக்கத்தில் தம்பதியினர் கஞ்சா செடி வளர்த்ததாக சந்தேகம் எழுந்துள்ளது. என்றனர்.