எந்த சண்டையும் இல்லை ஆனால் 12 முறை விவாகரத்து செய்த ஒரே தம்பதி - என்ன காரணம்?
12 முறை விவாகரத்து செய்து மறுமணம் செய்து கொண்ட விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது.
தம்பதி
ஆஸ்திரேலியாவில் உள்ள வியன்னா சேர்ந்தவர்கள் இந்த வயதான தம்பதியினர். இவர்கள் இருவரும், தங்கள் திருமணத்திற்கு பின்னர், கிட்டத்தட்ட 12 முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.
இந்த தம்பதியின் 43 வருட திருமண வாழ்க்கையில், ஒவ்வொரு முறையும் விவாகரத்து செய்து மறுமணம் செய்து கொண்டு, மீண்டும் விவாகரத்து செய்து வந்துள்ளனர். இப்படியாக இவர்களத் வாழ்க்கையில் 12 முறை விவாகரத்து செய்ததாக கூறப்படுகிறது.
அதாவது இந்த வயதான் தம்பதிகள் ஏறத்தாழ இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை விவாகரத்து பெற்றுகொள்வார்களாம். பிறகு மீண்டும் திருமணம் செய்துக்கொளவார்களாம். இருப்பினும், இந்த 40 வருடங்களாக அவர்கள் ஒரே வீட்டில் தான் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், இதை பற்றி அக்கம் பக்கத்தினரிடம் கேட்டப்போது இந்த வயதான ஜோடியின் வீட்டில் இருந்து சண்டை சச்சரவுகள் போன்ற எந்தவிதமான சத்தமும் எங்களுக்கு கேட்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
விவாகரத்து
அவர்கள் இருவரும் காதல் ஜோடி, இருப்பினும் இவர்கள் ஏன் விவாகரத்து மற்றும் மறுமணம் செய்துகொள்கிறார்கள் என்பது குறித்து தெரியவில்லை என்றும் கூறினர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தியப்போது, உண்மையில் அந்த விவாகரத்து மற்றும் மறுமணம் நிதி மோசடிக்காக நடந்தது என்று தெரியவந்தது.
அதாவது, விதவைகளை ஆதரிப்பதற்காக ஆஸ்திரிய அரசாங்கத்தால் வழங்கப்படும் நிதித் திட்டத்தில் உள்ள ஓட்டையை தம்பதியினர் பயன்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. அதன் படி, கணவனை இழந்து
தனியாக வாழும் பெண்களுக்கு உதவித் தொகையாக 28,300 டாலர்கள் (சுமார் 24 லட்சம் ரூபாய்) ஆஸ்திரிய அரசாங்கம் வழங்கி வருகிறது. பெண் தனது கணவனிடமிருந்து விவாகரத்து பெற்றால் 28,300 டாலர்கள் வழங்கி வருகிறது.
இதற்காகதான் இருவரும் அத்தனை முறை விவாகரத்து பெற்றதாக தெரிகிறது. மேலும், இந்த ஜோடி தற்போது நிதி மோசடி வழக்கு தொடர்பான விசாரணையை எதிர்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.