நடுரோட்டில்..நள்ளிரவு நிர்வாணமாக சண்டை போட்டு கொண்ட தம்பதி - viral video!
நள்ளிரவு நிர்வாணமாக சண்டை போட்டு கொண்ட தம்பதியின் வீடியோ வைரலாகி வருகிறது.
நடுரோட்டில்..
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நள்ளிரவு 2 மணிக்கு சாலையில் தம்பதி நிர்வாணமாக நடந்து சென்றுள்ளனர். நாக்பூரின் லக்ஷ்மிநகர் சதுக்கதில் உள்ள சாலையில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு 2 மணிக்கு ஆடைகளேதுமின்றி நிர்வாணமாக நடுத்தர வயது பெண்ணும் ஆணும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் வாகனத்தில் சென்ற இருவர், அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதோடு, அவர்களைப் படம் பிடித்து அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். படு வைரலாக பரவிய அந்த வீடியோவை பார்த்து அதிர்ந்த நெட்டிசன்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர்.
நிர்வாண தம்பதி
அண்மை காலமாக நாக்பூரில், தரம்பேட்,சாதர், பஜாஜ் நகர் என பல இடங்களில் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரிகிறது. சில நாட்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தை அடுத்து அவர்களை உடனே காலையில் போலீசார் தேடிப்பிடித்து விசாரித்துள்ளனர்.
விசாரணையில் அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போல் நடந்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து, அவர்களின் குடும்பத்தாரிடம் அறிவுரை கூறி அவர்களை அனுப்பி வைத்துள்ளனர்.