திடீரென கிளம்பிய புகைமூட்டம்.. மூச்சுத்திணறலால் கத்தி அலறிய தம்பதி - இறுதியில் பலியான சோகம்!

Accident Death Vellore
By Vinothini Sep 20, 2023 07:19 AM GMT
Report

செங்கல் சூளையில் திடீரென புகைமூட்டமானதால் மூச்சுத்திணறி தம்பதியினர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்சூளை

வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி (40). இவரது மனைவி அமுல் (30). இவர்களுக்கு சந்தியா (16), சினேகா (14), அரவிந்த் (12) என மூன்று பிள்ளைகள் உள்ளனர். கணவரும், மனைவியும் அதே ஊரை சேர்ந்த பழனிவேல் என்பவருக்கு சொந்தமான இடத்தில், கடந்த 15 ஆண்டுகளாக வாடகைக்கு எடுத்து செங்கல் சூளை நடத்தி வருகின்றனர்.

couple-died-due-to-suffocation-in-vellore

இந்த தம்பதியினர் பகல் முழுவதும் சூளையில் வேலை செய்துவிட்டு, இரவு வீட்டிற்கு சென்றுவிடுவது வழக்கம். நேற்றிரவு செங்கல் சூளையில் செங்கற்களை வேகவைக்க தீ மூட்டப்பட்டது, இவர்கள் தகர சீட் அருகே தங்கியுள்ளனர்.

உயிரிழப்பு

இந்நிலையில், நேற்று அப்பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. அதனால் அதில் எறிந்த தீ அணைந்து புகை பரவியது. அதில் பரவிய புகை சுற்றியுள்ள பகுதி முழுவதும் பரவி புகைமூட்டமானது. இதனால் கணவன் மணனைவி இருவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் அலறி கூச்சலிட்டுள்ளனர், ஆனால் பலத்த மழை பெய்ததால் இவர்கள் கூச்சலிட சத்தம் யாருக்கும் கேட்கவில்லை.

couple-died-due-to-suffocation-in-vellore

பின்னர் காலை 5 மணியளவில் இவர்களது பக்கத்து சூளை உரிமையாளர் சீனிவாசன், அந்த வழியாக சென்ற போது அமுலுவின் முனகல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினரை அழைத்து இருவரையும் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அதில் அமுலில் கணவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். அமுலிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது, ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.