கொள்ளிடம் ஆற்று பாலத்தில் இருந்து பாய்ந்த கார்; தம்பதி பலி - பதறவைக்கும் சம்பவம்!
கொள்ளிடம் ஆற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் தம்பதி உயிரிழந்துள்ளனர்.
கார் விபத்து
திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றில் உள்ள பாலத்தில் கார் ஒன்று வேகமாக சென்றபோது விபத்து ஏற்பட்டு உள்ளது. சென்னை நோக்கி இந்த கார் சென்றுள்ளது.
அதிகாலையில் பனிமூட்டம் காரணமாக டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பாலத்தில் இருந்து 80-90 கிமீ வேகத்தில் கார் வேகமாக கீழே விழுந்து கார் விபத்தில் சிக்கியது. கீழே விழுந்ததும் கார் தீ பிடித்துள்ளது.

அசுர வேகத்தில் சென்ற சொகுசு கார்...கண்ணிமைக்கும் நேரத்தில் அப்பளம் போல் நொறுங்கி விபத்து - பெண் உயிரிழப்பு
தம்பதி பலி
விபத்தில் கேரளா மாநிலத்தை சேர்ந்த தம்பதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். காரை மீட்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. காரில் வேறு யாரும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. இந்த விபத்து காரணமாக அந்த பாலம் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது.
இதனால் அங்கே போக்குவரத்தை சரி செய்ய போலீசார் குவிந்துள்ளனர். உயிரிழந்த தம்பதி சென்னையில் வசித்து வந்துள்ளனர். திருச்சி விமான நிலையத்தில் உறவினர்களை ஏற்றி அனுப்பிவிட்டு சென்னை சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.