இரவில் தனிமையில் இருந்த ஜோடி; தகாத உறவால் நேர்ந்த விபரீதம் - நடந்தது என்ன?
தனிமையில் இருந்த ஆண், பெண் இருவரும் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜோடி கொலை
கர்நாடகா மாநிலம், விஜயபுரா மாவட்டம் அருகே மரடகி தாண்டா கிராமம் உள்ளது. இங்கு காலை வேளையில் ஆண், பெண் இருவர் வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர்.
இதனை அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த போலீசார் கொலை செய்யப்பட்ட இருவரின் உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடந்தது என்ன?
இந்நிலையில், கொலை செய்யப்பட்டவர்கள் கனி கிராமத்தைச் சேர்ந்த சோமனிங்கப்பா கல்லப்ப கும்பரா(35), பார்வதி தல்வார்(38) என்று தெரிய வந்தது.
இவர்கள் இருவரும் வெவ்வேறு குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் எப்படி இங்கு கொலை செய்யப்பட்டார்கள் என்பதை போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
அதில், தகாத உறவினால் இந்த ஜோடி இரவு தனிமையில் இருந்த போது கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.