மதம் மாற வற்புறுத்தி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன் - மனைவியும் உடைந்தை!
மதம்மாற வற்புறுத்தி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
கர்நாடக மாநிலம் பெலகாவியில் அண்டை மாநிலத்து பெண் ஒருவர் அண்மையில் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த போலீசாருக்கு பல திடிக்கிடும் தகவல் வெளியானது.
அந்த புகாரில், ரபீக் என்பவர் அவரின் மனைவியின் கண்முன்னே தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், தன்னை மதம் மாற கட்டாயப்படுத்தியதாகவும் புகார் அளித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த காவல் துறை இது குறித்து விசாரனை செய்து வருகினறனர்.
மதம்மாற வற்புறுத்தல்
பெலகாவி காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) பீமாசங்கர் குலேடா, "குற்றம்சாட்டப்பட்ட ரபீக்கும், அவரின் மனைவியும், குற்றம்சாட்டும் பெண்ணும், ஒரே வீட்டில் வசித்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில் 2023-ம் ஆண்டு, ரபீக் அவரின் மனைவி கண்முன்னே, புகார் அளித்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரியவந்துள்ளது.
மேலும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த அந்த பெண்ணிடம் இஸ்லாம் மதத்துக்கு மாறுமாறும், புர்கா அணியுமாறும், குங்குமம் வைக்கத் தடைவிதித்ததாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அப்பெண்ணுடன் இருந்த அந்தரங்கப் படத்தை வைத்துக்கொண்டு, மதம் மாற்றம் செய்யாவிட்டால் அதை வெளியே பரப்பிவிடுவதாக மிரட்டியுள்ளனர் என்று அப்பெண் தெரிவித்திருக்கிறார். அதன் பேரில் கர்நாடக மத சுதந்திர உரிமைச் சட்டம், ஐடி சட்டம் மற்றும் எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கீழ் ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளனர்.