ஜோ பைடன் வெளியேறியது ஒரு சதி - எலான் மஸ்க் நடத்திய நேர்காணலில் டிரம்ப் பரபரப்பு பேச்சு!
அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பை, எக்ஸ் தள உரிமையாளர் எலான் மஸ்க் நேர்காணல் நடத்தினார்.
அதிபர் தேர்தல்
அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.அதேபோல் ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடன் அறிவிக்கப்பட்ட நிலையில் உடல் நலம் கருதி விலகிய நிலையில் கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
இதையடுத்து, இருவரும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் டொனால்ட் ட்ரம்பை, எக்ஸ் தள உரிமையாளர் எலான் மஸ்க் நேர்காணல் நடத்தினார். அப்போது அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் வெளியேறியது ஏன் ? என்று எலான் மஸ்க் கேள்வி எழுப்பினார்.
டிரம்ப் பரபரப்பு பேச்சு
இதற்கு பதிலளித்த ட்ரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து ஜோ பைடன் வெளியேறியது ஒரு சதி என்றும் அவரை மிரட்டிப் பணியவைத்துள்ளனர் என்றும் கூறினார். மேலும் கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபராக ஏன் தேர்வு செய்யப்படக்கூடாது எலான் மஸ்க் என கேள்வி எழுப்பினார்.
அமெரிக்காவில் பணவீக்கம் தற்பொழுது உச்சத்தில் உள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்க மக்கள் பணத்தை சேமித்து வைத்து இருந்தனர்.
ஆனால் தற்போது கடன் வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர் ன். இந்த சூழலில் கமலா ஹாரிஸ் அதிபராக தேர்வானால் அமெரிக்காவை அவர் அழித்து விடுவார் என்று ட்ரம்ப் அந்த நேர்காணலில் கூறினார்.