நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் இது நிச்சயம் நடக்கும் - அண்ணாமலை உறுதி!
நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் நம் நாட்டின் பொருளாதாரம் மேலும் உயரும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை
திருப்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் முருகானந்தத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் "திருப்பூர் தொகுதியில் மாற்றம் வரவேண்டும்.

வளர்ச்சி எல்லா பகுதிக்கு வர வேண்டும். தமிழகத்தின் அரசியல் களத்தை அனைவரும் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இந்தியாவில் 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் யார் ஆட்சி செய்ய வேண்டும். மக்களுக்கு யார் நல்லது செய்ய வேண்டும் என்பதற்கான தேர்தல்.
பொருளாதாரம் உயரும்
பா.ஜ.க. பேருந்து மட்டும் டெல்லி நோக்கி சென்று கொண்டு உள்ளது. மற்ற எதிர்கட்சிகள் பேருந்து எங்கே போவது தெரியாமல் உள்ளார்கள். நரேந்திர மோடி மீண்டும் நம் நாட்டின் பிரதமராக வந்தால் நமது நாட்டின் பொருளாதாரம் மேலும் உயரும் .வலிமையான நாட்டை மோடி அரசு உருவாக்கி உள்ளது.

தமிழகத்தின் கலாச்சாரம், பண்பாடு, மொழி ஆகியவற்றுக்கு இதுவரை எந்த பிரதமரும் கொடுக்காத அங்கீகாரத்தை மோடி கொடுத்துள்ளார்.மோடி சாமானிய மகனாக இருந்து உழைப்பு மூலம் வளர்ந்து வருகிறார்" என்று தெரிவித்துள்ளார்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
அருங்காட்சியகத்திற்கு வழங்கப்படவுள்ள விடுதலைப் புலிகள் தலைவரின் நினைவுப் பரிசு! நீதிமன்றின் விசேட உத்தரவு IBC Tamil