இந்தியா கிட்ட கூட இல்ல!! உலகளவில் அதிக தங்கம் வைத்திருக்கும் நாடு எது தெரியுமா?
உலக அளவில் அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலை குறித்து பார்க்கலாம்.
தங்கம்
தங்கம் என்பது பெண்களுக்கு மட்டுமின்றி பல ஆண்களுக்கும் பிடித்தமான ஒன்றே. அதனை யாராலும் மறுத்துவிட முடியாது. தங்கத்தில் ஆபரணங்கள் வைத்திருப்பதில் துவங்கி, சிலர் தங்கத்தில் சாப்பிட தட்டு, டம்பிளர் கூட வைத்திருங்க தான் செய்கிறார்கள்.
இது இந்தியாவில் மட்டுமா? என கேட்டால் அப்படி இல்லை. நாம் ஊரில் இருப்பவர்களை தாண்டி உலக நாடுகளில் இருக்கும் பலருக்கும் தங்கத்தின் மீதான ஆர்வம் அதிகமே. அப்படி அதிகமாக தங்கம் வைத்திருக்கும் நாடுகளில் பட்டியலை தற்போது காணலாம்.
உலக தங்க கவுன்சில் சமீபத்தில் நாடுகளின் தங்க இருப்பு தரவரிசையை வெளியிட்டது. அதன்படி,
- 10-வது இடத்தில் நெதர்லாந்து - 612.45 டன்
- 9-வது இடத்தில் இந்தியா - 800.78 டன்
- 8-வது இடத்தில் ஜப்பான் - 845.97 டன்
- 7-வது இடத்தில் சுவிசர்லாந்து - 1040 டன்
- 6-வது இடத்தில் சீனா - 2191.53 டன்
- 5-வது இடத்தில் ரஷ்யா - 2332.74 டன்
- 4-வது இடத்தில் பிரான்ஸ் - 2436.91 டன்
- 3-வது இடத்தில் இத்தாலி - 2451.84 டன்
- 2-வது இடத்தில் ஜெர்மனி - 3352.65 டன்
- 1-வது இடத்தில் அமெரிக்கா - 8133.46 டன்
மற்ற நாடுகள் நெருங்க கூட முடியாத அளவிற்கு தங்கத்தை வைத்துள்ளது அமெரிக்கா. அமெரிக்கர்களுக்கு தங்க நகை ஆபரணங்கள் மீது அதீத காதல் இருப்பதை இந்த தகவலே சுட்டிக்காட்டுகிறது.
வளர்ச்சி அடைந்த நாடுகளாக குறிக்கப்படும் அநேக நாடுகள் தான் இந்த பட்டியலில் கோலோச்சுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு நாட்டின் பொருளாதாரமும் - அந்நாட்டு மக்களின் வாழ்க்கை முறையை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் நாம் இதன் மூலம் அறிந்து கொள்ளாலாம்.