ஒரு நாளில் ஒரு நாட்டையே சுற்றிப் பார்க்கலாமாம் - எது தெரியுமா?
1 நாளில் சுற்றிப்பார்க்க கூடிய நாடுகளின் பட்டியல் குறித்து தெரிந்துக் கொள்வோம்.
ஈசி சுற்றுலா
வாடிகன் நகரத்தின் மொத்த பரப்பளவு 121 ஏக்கர் மட்டுமே. இங்குள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலியா உலகின் இரண்டாவது மிகப்பெரிய தேவாலயமாகும். பல அருங்காட்சிகளின் தாயகம் இதுதான்.
உலகின் இரண்டாவது சிறிய நாடான மொனாக்கோ, வாழ்வதற்கு மிகவும் விலையுயர்ந்த நாடுகளில் ஒன்றாகும். இங்கு மாண்டே கார்லோ கேசினோ. ஃபார்முலா 1 கிராண்ட் மற்றும் இளவரசர் அரண்மனையை காணலாம்.
சான் மரினோ இது இத்தாலியால் முழுவதுமாகச் சூழப்பட்ட நாடு. ஆண்டு முழுவதும் மழைப்பொழிவு பரவுகிறது. எனவே இயற்கை காட்சிகளை ஆழமாக அனுபவிக்கலாம்.
லக்சம்பர்க் இது குடிமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இருவருக்கும் இலவச பொது போக்குவரத்தை வழங்கும் உலகின் முதல் நாடு. வியாண்டன் கோட்டை, Le Chemin de la Corniche, Neumünster Abbey, The Bock and Casemates, The Grund District, La Passerelle, லக்சம்பர்க் தேசிய அருங்காட்சியகம் மற்றும் லக்சம்பர்க் நகர அருங்காட்சியகம் ஆகியவை மிகவும் பிரபலமானவை.
அண்டோரா பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்கு இடையே அமைந்துள்ளது. வரி இல்லாத ஷாப்பிங்கிற்கு பெயர்போனது. அங்குள்ள ரோமானஸ் தேவாலயம் மிகவும் பிரபலம்.