உலகில் முதலாவதாக கிரிபாட்டி தீவில் புத்தாண்டு பிறந்தது - கடைசியாக எந்த நாட்டில் தெரியுமா?
உலகில் முதல் நாடாக கிரிபாட்டி தீவில் புத்தாண்டு பிறந்துள்ளது.
2025 புத்தாண்டு
2024 ஆம் ஆண்டு முடிந்து புதிதாக பிறக்கும் 2025 ஆம் ஆண்டை வரவேற்க உலக நாடுகள் தயாராகி வருகின்றன. இந்தியா நேரப்படி இன்று இரவு 12 மணிக்கு புத்தாண்டு தொடங்குகிறது.
புது வருட முதல் நாளில் வழிபாட்டு தளங்கள் செல்வது, கேக் வெட்டுவது என தங்களுக்கு விருப்பமான வழிகளில் புத்தாண்டை வரவேற்பார்கள். பெரும்பாலும் கடற்கரைகளில் மக்கள் மொத்தமாக கூடி புத்தாண்டை வரவேற்பார்கள், இதனால் நள்ளிரவில் கடற்கரைகள் விழாக்கோலங்களை கொண்டிருக்கும்.
கிரிபாட்டி தீவு
உலகம் முழுவதும் வெவ்வேறு நேரம் பின்பற்றப்படுவதன் காரணமாக சில நாடுகளில் முதலாவதாகவும், சில நாடுகளில் தாமதமாகவும் புத்தாண்டு பிறக்கிறது.
இந்த நிலையில் உலகில் முதலாவதாக, மத்திய பசுபிக் கடல் பகுதியில் உள்ள கிறிஸ்துமஸ் தீவில் (Christmas Island) என அழைக்கப்படும் கிரிபாட்டி தீவில் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு புத்தாண்டு பிறந்துள்ளது.
இந்திய நேரப்படி 8:30 மணி நேரத்துக்கு முன்பும், கிரீன்விச் சராசரி நேரத்துக்கு 14 மணி நேரத்துக்கு முன்பும் அங்கு புத்தாண்டு பிறந்துள்ளது. புத்தாண்டு பிறந்ததையொட்டி மக்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியான கொண்டாடி வருகின்றனர்.
கடைசி நாடு
கிரிபாட்டி தீவைத் தொடர்ந்து நியூசிலாந்தின் சாதம் தீவுகளில் இந்திய நேரப்படி பிற்பகல் 4.30க்கு புத்தாண்டு பிறந்தது. அதனை தொடர்ந்து, ரஷ்யாவின் சிறிய பகுதிகளில் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கும், ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் மாலை 6.30 மணிக்கும், சீனா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் இரவு 9.30 மணிக்கும், இந்தியா, இலங்கையும் 12 மணிக்கு புத்தாண்டை தொடங்குகிறது.
ஐக்கிய அரபு எமிரேட், ஓமன் உள்ளிட்ட நாடுகள் காலை 1.30 மணிக்கும், இங்கிலாந்தில் காலை 5;30 மணிக்கும் அமெரிக்கா கனடா உள்ளிட்ட நாடுகளில் காலை 10;30 மணிக்கும் புத்தாண்டு பிறக்கிறது.
உலகில் கடைசியாக சமோவா தீவில் நாளை மாலை 4;30 மணிக்கு தான் புத்தாண்டு தொடங்குகிறது.