சுட்டெரிக்கும் கோடை வெயில் - அயோத்தி குழந்தை ராமருக்கு பருத்தி ஆடை!

Uttar Pradesh India Ayodhya Ayodhya Ram Mandir
By Jiyath Mar 31, 2024 10:09 AM GMT
Report

அயோத்தி ராமர் சிலைக்கு பருத்தி ஆடை அணிவிக்கப்படும் என ராம ஜென்ம பூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை அறிவித்துள்ளது.

ராமர் கோவில்

உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலின் திறப்பு விழா பிரதமர் மோடி தலைமையில் கடந்த மாதம் 22-ம் தேதி நடைபெற்றது. அப்போது சிறப்பு பூஜைக்கு பின்பு, குழந்தை ராமர் சிலை கண் திறக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

சுட்டெரிக்கும் கோடை வெயில் - அயோத்தி குழந்தை ராமருக்கு பருத்தி ஆடை! | Cotton Cloths Used For Ayodhya Rama

குழந்தை ராமருக்கு பிரதமர் மோடி முதல் பூஜை செய்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார். பின்னர் கோவில் கருவறை திரைச்சீலை விலக்கப்பட்டு மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது.

உலகின் அதிக கல்வியறிவு கொண்ட நாடுகளின் பட்டியல் - இந்தியாவின் நிலைமை என்ன?

உலகின் அதிக கல்வியறிவு கொண்ட நாடுகளின் பட்டியல் - இந்தியாவின் நிலைமை என்ன?

பருத்தி ஆடை

தற்போது பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் ராமரை வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் ராமர் சிலைக்கு பருத்தி ஆடை அணிவிக்கப்படும் என ராம ஜென்ம பூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை அறிவித்துள்ளது.

சுட்டெரிக்கும் கோடை வெயில் - அயோத்தி குழந்தை ராமருக்கு பருத்தி ஆடை! | Cotton Cloths Used For Ayodhya Rama

அதன்படி, "தற்போது நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. நாளுக்குநாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதனால், கோடைக் காலம் தொடங்கி வெப்பநிலை அதிகரித்துள்ளதால், அயோத்தி ராமருக்கு இன்று முதல் பருத்தி உடை அணிவிக்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.