EXக்கு நான் தந்த காஸ்ட்லி கிப்ட்.. சுத்த வேஸ்ட்.. தேவையில்லாத செலவு - சமந்தா ஒபன்டாக்!
EXக்குகாக கொடுத்த கிப்ட் தேவையில்லாத செலவு என்று சமந்தா தெரிவித்துள்ளார்.
சமந்தா
பானா காத்தாடி படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான சமந்தா, பல வெற்றிப்படங்கள் மூலம் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அதோடு 'மயோசிட்டிஸ்' என்ற நோய்க்கான சிகிச்சையிலும் ஈடுபட்டு வருகிறார்.

தற்போது ‘சிட்டாடல் ஹனி பனி’(Citadel: Honey Bunny) என்ற வெப் சீரிஸில் நடித்துள்ளார்.கடந்த வாரம் அந்த வெப் சீரிஸ் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், சிட்டாடல் ஹனி பனி வெப் சீரிஸ் ப்ரோமோஷன் மற்றும் வெற்றி கொண்டாட்டம்
அமேசான் பிரைம் spy-cy Rapid Fire With Samantha And Varun Dhawan நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சமந்தாவும் வருண் தவானும் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி கேள்வி கேட்டுக்கொள்கிறார்கள்.
காஸ்ட்லி கிப்ட்..
இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது அமேசான் பிரைமில் வெளியாகியிருக்கிறது. அதில் வருண் தவான் சமந்தாவிடம் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தேவையில்லாமல் செலவு செய்த மிகப்பெரிய தொகை எது என்று கேள்வி கேட்கிறார்.

அதற்கு சமந்தா சற்றும் யோசிக்காமல் அது என்னுடைய EXக்கு நான் கொடுத்த விலைமதிப்பற்ற கிப்ட் என்று, சிரித்துக் கொண்டே பதில் கொடுத்திருக்கிறார். இந்த ப்ரோமோ இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இது அவரது முன்னாள் கணவரை குறிக்கிறது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விளம்பரத்திற்காக நஞ்சாக்கப்படும் தமிழ் தேசியம்...! காழ்ப்புணர்ச்சி அரசியலைத் தோலுரிக்கும் கருணாநிதி IBC Tamil