125 கடைகளுக்கு சீல் - சென்னை மாநகராட்சி அதிரடி!
சென்னையில் 125 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
கடைகளுக்கு சீல்
திருவல்லிக்கேணி, ஜி.பி.சாலை, பாரதிசாலை, செல்லப்பிள்ளையார் கோவில் தெருக்களில் உள்ள கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தொழில் வரி செலுத்தாமல் இழப்பீடு ஏற்படுத்தும் வகையில் கடைகள் இயங்கியதாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய வீதிகளில் உள்ள கடைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக அப்பகுதியில் கூட்டம் கூடியது. போலீசார் உதவியோடு கூட்டம் அப்புறப்படுத்தப்பட்டு, 125 கடைகளை சீல் செய்யும் பணி நடைபெற்றது.
சில கடைக்காரர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து வரி ஏய்ப்பு செய்து வரும் கடைகள் மீது இந்த நடவடிக்கை தொடரும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.