Wanted-ஆ கொரோனா வாங்கும் சீனர்கள் - விபரீத முடிவில் இறங்கிய இளைஞர்கள்!
நோய் எதிர்ப்பு சக்திக்காக சீன இளைஞர்கள் விபரீத முடிவினை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் மாநிலத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அதற்கு அடுத்ததாக உலகம் முழுவதும் பரவியது. தொடர்ந்து சீனாவில் றிப்பிடத்தக்க வகையில் புதிய பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து இருக்கிறது.

கொரோனாவின் மாறுபட்ட வேரியன்டான ஓமைக்ரான் பிஎஃப் 7 காரணமாக சீனாவில் பாதிப்பு மீண்டும் அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அதே நேரத்தில் அந்நாட்டு அரசு கொரோனா குறித்த விவரங்களை வெளியிடாததால் சீனாவில் தற்போது என்ன நிலைமை நிலவுகிறது என்பது குறித்தும் மற்ற உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன.
விபரீதம்
இந்நிலையில், தங்கள் நாட்டில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் தரமானவை அல்ல என்ற அவநம்பிக்கையின் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியை பெறுவதற்காக அவர்களே கொரோனாவை ஏற்றுக் கொண்டு வருவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பால் 14 நாட்கள் வீட்டில் தனிமை படுத்தப்படும் போது தங்களுக்கு இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தி பரவும் என நம்புகிறார்கள்.