தமிழகத்தில் முக கவசம் கட்டாயம்? சுகாதாரத்துறை பரபரப்பு விளக்கம்!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது.
மாஸ்க் கட்டாயம்
கடந்த சில நாட்களாக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. நேற்றைய நிலவரப்படி நாடு முழுவதும் 250க்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிகபட்சமாக கேரளாவில் 182, தமிழ்நாட்டில் 66 , மகாராஷ்டிராவில் 56 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
சுகாதாரத்துறை விளக்கம்
தொடர்ந்து தமிழ்நாட்டில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள சுகாதாரத்துறை, கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று பரவி வரும் தகவல் தவறானது.
கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அறிவிப்பு இதுவரை தமிழக அரசு சார்பாக வெளியிடப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.